×

ரெசிபிஸ் ஃபார் கிட்ஸ்!

உலகிலேயே மிகப்பெரிய டாஸ்க் எனில் அது குழந்தைகளை உணவருந்த வைப்பதுதான். ஒவ்வொரு தாய்மார்களும் இதற்கென தனி உலகப் போரே நடத்துகின்றனர். தோசையை கார்டூன் பொம்மை போல் சுடுவது, சப்பாத்திக்கு இடையே வண்ணமயமான காய்கறி உருவங்கள், காய்கனிகளைக் கொண்டு மதிய உணவு டிபன் பாக்ஸில் அலங்கரிப்பது என என்னதான் செய்யவில்லை. இதற்குதான் உதவுகிறது ‘Recipes for Kids’ செயலி. கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகவே கிடைக்கும் இந்தச் செயலியில் உணவை எப்படி ஆர்வமானதாக மாற்றலாம், விளையாட்டு மூலம் குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது போன்ற பல அம்சங்கள் நிறைந்துள்ளன.

ஆஹா பாகற்காய்

கசப்பு ருசி கொண்ட பாகற்காயை அநேகர் விரும்பிச் சாப்பிடுவதில்லை. அதன் மருத்துவ சக்தியை உணர்ந்து கொண்ட ஒருசிலர்தான் பாகற்காயைச் சமைத்து உண்பர். பாகற்காயை அடிக்கடி சாப்பிட்டு வருபவருடைய கண்பார்வை தெளிவாகும். பல் கோளாறுகள் நீங்கி பல் உறுதிப்படும். எலும்புகள் உறுதியடையும். நரம்புகள் பலம் பெறும். உடல் பலம் பெறும். உடலில் உள்ள இரத்தம் தூய்மைப்படுத்தப்பட்டு, புதிய இரத்தம் உற்பத்தி ஆகும். இளமையிலிருந்தே பாகற்காயைச் சாப்பிட்டு வருபவர், முதுமையிலும் இளமையுடன் தோற்றமளிக்கலாம். பாகற்காயால் சருமநோய், வாதநோய், கிருமி நோய், மூலநோய் ஆகியவை நீங்கும். இப்போது ஒவ்வொருவரின் குடும்பத்திலும் நிறைந்திருக்கும். நீரிழிவைக் குணப்படுத்தும் சக்தி பாகலுக்கு உண்டு. வைட்டமின் ஏ, பி, இ, உயிர்ச் சத்து, இரும்புச் சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த பாகற்காயை நாம் வாரத்திற்கு ஒரு முறையேனும் சமைத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்குத் தேவையான அத்தனை நன்மைகளும் குறைவின்றிக் கிடைக்கும்.

– ஆர். ஜெயலெட்சுமி.

The post ரெசிபிஸ் ஃபார் கிட்ஸ்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மலிவான...