×

பெரம்பலூர் அருகே பருத்தி பஞ்சு அறுவடை பணி தீவிரம்

தா.பழூர்,: அரியலூர் மாவட்டம் தா பழூர் வேளாண் வட்டாரத்தில் குறுவை பட்டம் சாகுபடியை விட அதிக அளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி மேற்கொண்டு இருந்தனர். இந்த ஆண்டு விவசாயிகள் நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் அதிகப்படியான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்தனர். தற்போது கோடாலி கருப்பூர், இடங்கண்ணி, சோழமாதேவி, உதயநத்தம், முத்துவாஞ்சேரி, கீழநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கூடுதலாக பருத்தி சாகுபடியில் ஈடுபட இருந்தனர். இந்நிலையில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் பருத்தி பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. மேலும் பருத்தி செடிகள் சாய்ந்து வருகிறது.

இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது பஞ்சுகள் வெடிக்க துவங்கியதும் கூலி தொழிலாளிகள் மூலம் பஞ்சு அறுவடை செய்யும் பணி துவங்கி உள்ளனர். சென்ற ஆண்டு குவிண்டால் 12 ஆயிரம் ரூபாய் விற்பனை ஆன நிலையில் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பருத்தி விலை சுமார் 6, மற்றும் 7 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவது பருத்தி விவசாயிகளிடம் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இது குறித்து பருத்தி விவசாயிகள் கூறும்போது பருத்திக்கு அரசு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறினர்.

The post பெரம்பலூர் அருகே பருத்தி பஞ்சு அறுவடை பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Tha.Palur ,Tha Palur ,Ariyalur district ,Kurvai Battam ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...