×

ஒன்றிய அரசின் துறைகளுக்கு மேலும் 17 தனியார் நிபுணர்கள்: யுபிஎஸ்சி மூலம் நேரடி நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் இயக்குநர், செயலாளர் உள்ளிட்ட 17 பணிகளுக்கு தனியார் துறை நிபுணர்களை நேரடியாக நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. டந்த மாதம் 20 நிபுணர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது ஒன்றிய அரசு அலுவலகங்களின் இயக்குநர்கள், செயலாளர்கள் மற்றும் துணைசெயலாளர்களாக மேலும் 17 தனியார் துறை நிபுணர்களை நியமிக்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த பணிகளுக்கு நேரடியாக நியமனம் செய்யுமாறு ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜுன் 3ம் தேதி ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வௌியாகும். விருப்பமுள்ளவர்கள் ஜுன் 3 முதல் ஜுலை 3 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதனடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசின் துறைகளுக்கு மேலும் 17 தனியார் நிபுணர்கள்: யுபிஎஸ்சி மூலம் நேரடி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Union Govt Departments ,UPSC ,New Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED திருப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர்,...