×

பஞ்சவாத்ய இசை நிகழ்ச்சி ஓட்டல் தொழிலாளியை தாக்கி செல்போன் பறித்த 6 பேர் கைது

 

ஈரோடு, மே 31: மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் நகரை சேர்ந்தவர் ரஹிம்ஷா (36). இவர், ஈரோடு, சத்தி ரோடு, ஞானபுரம், மாரியம்மன் கோயில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். ரஹிம்ஷா தனது நண்பருடன், கடந்த 28ம் தேதி இரவு பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, பேருந்து நிறுத்தத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது அருந்தி கொண்டிருந்துள்ளது. இந்நிலையில், ரஹிம்ஷா தனது பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்தபோது பாக்கெட்டில் இருந்த அவரது செல்போன் கீழே விழுந்துள்ளது. அப்போது, அங்கு மது அருந்தி கொண்டிருந்த கும்பலில் இருந்த ஒருவர் ரஹிம்ஷாவின் செல்போன் எடுத்து கொண்டதாகவும், அதுகுறித்து, ரஹிம்ஷா அவரிடம் கேட்டபோது, அவர்கள் 6 பேரும் சேர்ந்து ரஹிம்ஷாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதனை பார்த்த அருகில் இருந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அப்பகுதியினர் திரண்டதால், கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. இதுகுறித்து ரஹிம்ஷா, ஈரோடு வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன் தினம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஹிம்ஷாவை தாக்கி செல்போன் பறித்து சென்ற எல்லப்பாளையம், ஆயப்பாளியை சேர்ந்த சந்தோஷ் (26), கிருஷ்ணமூர்த்தி (24), ஈரோடு காளை மாட்டு சிலை, தீயணைப்பு நிலையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (24), பாரத் (20), குணசேகரன் (25), சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (27) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

The post பஞ்சவாத்ய இசை நிகழ்ச்சி ஓட்டல் தொழிலாளியை தாக்கி செல்போன் பறித்த 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Panchavadya music concert ,Erode ,Rahimsha ,Midnapore, West Bengal ,Satti ,Panchavadya ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி