×

சாலையில் அபாய மணல் குவியல்

சாத்தான்குளம், மே 30: விஜயராமபுரம்- நடுவக்குறிச்சி சாலையோரத்தில் மணல் குவியல்களும், பள்ளங்களும் நிறைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். சாத்தான்குளத்தில் இருந்து திசையன்விளை செல்ல தச்சமொழி, விஜயராமபுரம், சிறப்பூர், அடைப்புவிளை, சாமிதோப்பு, நடுவக்குறிச்சி வழிச்சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவிலும் ஏராளமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இந்த சாலையில் சிறப்பூர் அடுத்த பகுதியில் இருந்து அடைப்புவிளை இடையே உள்ள சாலையோரம் மணல் குவியலாக காணப்படுகிறது. இதனால் எதிரே பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதிரே வரும்போது இருசக்கர, கார்களில் வருபவர்கள் மணல் குவியலால் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. மேலும் சாமிதோப்பு அடுத்து சுடலைமாட சுவாமி கோயில் முன்பு சாலையோரத்தில் குண்டும், குழியாக காணப்படுகிறது. இரவு நேரத்தில் வாகனங்கள் கவிழும் அபாயமும் காணப்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையோரத்தில் குவிந்துள்ள மணல் குவியலை அப்புறப்படுத்துவதுடன், சாலையோரத்தின் இருபுறமும் மணல் நிரப்பி சமப்படுத்த எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post சாலையில் அபாய மணல் குவியல் appeared first on Dinakaran.

Tags : Chatankulam ,Vijayaramapuram- Madhukurichi road ,Satankulam… ,
× RELATED கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.50 லட்சம்...