×

தொழில் துவங்க ஆர்வம் உடைய இளைஞர்கள் கடன் பெற அழைப்பு

 

ஊட்டி, மே 30: தொழில் தொடங்க ஆர்வமும் தகுதியும் உடைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (யூஒய்ஜிபி) திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியுள்ளார். இதுகுறித்து கலெக்டர் மேலும் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் துவங்கும் வகையில் (யூஒய்ஜிபி) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை திட்ட மதிப்பீட்டில் வியாபார தொழில்கள் துவங்க 25 சதவீத மானியத்துடன் கூடிய கடன்கள் வங்கிகள் மூலம் பெற்று தரப்படுகிறது.

The post தொழில் துவங்க ஆர்வம் உடைய இளைஞர்கள் கடன் பெற அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி