×

திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே கத்திகுத்து

புதுடெல்லி: டெல்லியில் உள்ள திகார் சிறையில் மத்திய சிறை எண் 1ல் அடைக்கப்பட்டிருந்த ராகுல் என்ற பவனுக்கும் விசாரணை கைதியான அலோக் என்ற விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அலோக் தான் மறைத்து வைத்திருந்த கைத்தியால் ராகுலை சரமாரியாக குத்தினார். இந்த மோதல் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலாக மாறியது. இதனை, அங்கிருந்த தமிழ்நாடு சிறப்பு காவலர்கள் மற்றும் அதிரடி விரைவு படை தலையிட்டு சண்டையிட்டு கொண்டிருந்த கைதிகளை பிரித்தனர். பின்னர் காயம் அடைந்தவர்களை அருகிலுள்ள தீன் தயாள் உபாத்யாய மருத்துவமனையில் அனுமதித்தனர்.

The post திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே கத்திகுத்து appeared first on Dinakaran.

Tags : Tikar prison ,New Delhi ,Raqul ,Bhawan ,Central Prison No. ,Dhigarh Jail, Delhi ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...