×

ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்பு

புதுடெல்லி: ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா நேற்று பொறுப்பேற்றார். ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த சுரேஷ் என். படேல் கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார். இந்நிலையில், ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக பிரவீன் குமார் வத்சவா நேற்று பொறுப்பேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பிரவீண் குமார் ஸ்ரீவத்சவாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

விழாவில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 1988ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பிரவீன் குமார், கடந்த ஆண்டு ஒன்றிய அரசின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் 4 ஆண்டுகள் அல்லது 65 வயது ஆகும் வரை பதவியில் இருப்பார்.

The post ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Srivastava ,New Delhi ,Union Corruption Surveillance Commission ,Praveen Kumar Srivastava ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு