- ஆர் கெ புழுவாபதி அம்மன் கோவில் தீ பீடி விழா
- ஆர் கெ பிளிவிப்பட்டி அம்மன் திருக்கோயிலில்
- பைவலசா
- மகா
- ஆர் கெ திரவ அம்மன் கோவில் தீ மிதி விழா
பள்ளிப்பட்டு: ஆர்.கே. பேட்டை அருகே பைவலசா கிராமத்தில் மிகப் பழமையான திரவுபதி அம்மன் திருக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சமீபத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக திரவுபதியம்மன் ஆலய திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் பகல் நேரங்களில் மகாபாரத சொற்பொழிவு, இரவு நேரங்களில் தெருக்கூத்து நடைபெற்றன. தினமும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகளுடன் திருவீதியுலா நடைபெற்றது.
இந்நிலையில், திரவுபதியம்மன் திருக்கோயிலில் நேற்று மாலை தீ மிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். அவர்கள் நேற்று மாலை பூங்கரகத்துடன் ஊர்வலமாக வந்து, அக்னிகுண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கோயிலின் அருகே குவிந்திருந்தனர். இங்கு காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.
The post ஆர்.கே.பேட்டை அருகே திரவுபதி அம்மன் ஆலய தீ மிதி திருவிழா: 1000 பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.