×

போராட்டம் நடத்த ஜந்தர் மந்தரில் அனுமதி கிடையாது: டெல்லி போலீஸ் அறிவிப்பு

புதுடெல்லி: மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது. பாஜக எம்பி பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்கள் ேநற்று கைது செய்யப்பட்டனர். விதிமுறைகளை மீறியதாக கூறி மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

போராட்டம் நடந்த இடத்தில் இருந்த கூடாரங்களை காவல்துறை அகற்றியது. இந்நிலையில் டெல்லி காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. மல்யுத்த வீரர்கள் வருங்காலத்தில் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி கோரினால், ஜந்தர் மந்தர் அல்லாத பொருத்தமான இடத்தில் அனுமதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post போராட்டம் நடத்த ஜந்தர் மந்தரில் அனுமதி கிடையாது: டெல்லி போலீஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Jandar Mantar ,Delhi Police ,New Delhi ,BJP ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் கைகலப்பு...