×

ஏழுமலையானை தரிசிக்க வந்த போது வழி தவறிய 10 வயது சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருமலை : ஏழுமலையானை தரிசிக்க வந்த போது வழி தவறிய 10 வயது சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். திருப்பதி மாவட்டம், வெங்கடகிரி பகுதியை சேர்ந்த மஸ்தானா குடும்பத்தினர் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். தரிசனத்திற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் அலிபிரி பணிமனை அரசு பஸ்சில் திருப்பதி வந்தனர். திருப்பதி பஸ் நிலையத்தில் மஸ்தான் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் இறங்கினர்.

ஆனால், மஸ்தான் மகள் ஹேமஸ்ரீ(10) என்பவர் மட்டும் இருக்குயில் தூங்கி கொண்டிருந்தார். பஸ் ஓட்டுநர் குமார் பஸ்சை திருப்பதி ரயில்வே ஸ்டேஷ்னுக்கு சென்று அங்கு பயணிகளை ஏற்றி கொண்டு அலிபிரி பாலாஜி பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது, அங்கு பணியில் இருந்த கன்ட்ரோலர் வேலாயுதம் பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஹேமஸ்ரீயை எழுப்பி கேட்டபோது தனது அப்பா பெயர் மஸ்தான் என்றும், வெங்கடகிரி அடுத்த சின்னப்பரெட்டிகாரிபள்ளே கிராமத்தை சேர்ந்தவர் என்றும் கூறினார்.

இதையடுத்து, ஹேமஸ்ரீ தனது தந்தை மொபைல் எண்ணை கூறினார். தொடர்ந்து, மஸ்தானுக்கு போன் செய்து சிறுமி தங்களிடம் இருகிறார். அவரை கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டோம். அங்கு வந்து அழைத்து செல்லும்படி கூறினர். கிழக்கு காவல் நிலையத்திற்கு நேற்று காலை வந்த மஸ்தான் மகள் ஹேமஸ்ரீயை அழைத்து சென்றார்.

The post ஏழுமலையானை தரிசிக்க வந்த போது வழி தவறிய 10 வயது சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Echumalayan ,Thirumalai ,Etumalayan ,Tirupati District ,
× RELATED 8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில்...