திருப்பதி : திருப்பதியில் நிர்வாக வசதிக்காக காவல் நிலைய எல்லைகள் ஜூன் 1ம்தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளதாக எஸ்பி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி மாவட்ட காவல் நிர்வாக வசதிக்காகவும், சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும் காவல் நிலைய எல்லைகளில் ஒருசில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
ஏற்கனவே, திருப்பதியில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி சப்-டிவிஷனில் கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், அலிபிரி காவல் நிலையம், பல்கலைக்கழக காவல் நிலையம் உள்ளது. சந்திரகிரி சப்-டிவிஷனில் திருப்பதி ரூரல் காவல் நிலையம், திருச்சானூர் காவல் நிலையம், சந்திரகிரி காவல் நிலையம், ராமச்சந்திராபுரம் காவல் நிலையம், பாகாலா காவல் நிலையம், எர்ரவாரிபாளையம் காவல் நிலையம், பாக்ராபேட்டை காவல் நிலையம் உள்ளது. இதில் திருப்பதி கிழக்கு, அலிபிரி, திருச்சானூர், திருப்பதி ரூரல் காவல் நிலைய எல்லைகளில் ஒரு சில பகுதிகள் மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.
The post திருப்பதியில் நிர்வாக வசதிக்காக காவல் நிலைய எல்லைகள் ஜூன் 1ம்தேதி முதல் மாற்றம்-எஸ்பி பேட்டி appeared first on Dinakaran.
