×

ம.பியில் ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

போபால்: மத்தியபிரதேசம் ஜபல்பூரில் பயங்கரவாத எதிர்ப்பு படையும், உளவுத்துறையும் இணைந்து 13 இடங்களில் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த சையத் மம்மூர் அலி, முகமது அடில் கான், முகமது ஷாஹித் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இவர்கள் 3 பேரும் சமூக ஊடகங்கள் மூலம் ஐஎஸ்் தீவிரவாதத்தை பரப்பியதாக மத்திய புலனாய்வு அமைப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சிறப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரையும் ஜூன் 3ம் தேதி வரை என்ஐஏ காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

The post ம.பியில் ஐஎஸ் தீவிரவாதிகள் கைது appeared first on Dinakaran.

Tags : IS ,Bhopal ,Jabalpur ,Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED கல்வியைவிட உயர்வானது எது?