×

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை.. உ.பி. அரசின் தாமதமாக அறிக்கை தாக்கல் : உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

டெல்லி : உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கிராமத்தில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது பாஜவினர் சென்ற வாகனங்கள், விவசாயிகள் மீது மோதி தூக்கி வீசியது. இதில், 4 விவசாயிகள் பலியாயினர். இதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 4 பாஜ.வினர், ஒரு பத்திரிகையாளர் என 5 பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது மோதிய கார், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. அமைச்சரின் மகனும் காரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதுதொடர்பான வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா ஹோலி, சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.அப்போது நீதிபதிகள் உபி அரசு வழக்கறிஞரிடம், ‘விவசாயிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் உபி காவல் துறையினர் விசாரணையை தாமதப்படுத்துகிறார்கள் என நாங்கள் நினைக்கிறோம். அதனை பொய்யாக்கும் வகையில் விரைவுப்படுத்துங்கள். இதுவரை நான்கு சாட்சிகளிடம் மட்டுமே வாக்குமூலம் வாங்கியுள்ளீர்கள். மற்ற சாட்சிகளிடம் ஏன் இன்னும் வாங்கவில்லை? விரைவில் சிறப்பு விசாரணைக் குழுவினர் மீதமுள்ள அனைவரிடமும் வாக்குமூலத்தை வாங்கி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறி விசாரணையை அக்.26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்….

The post லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை.. உ.பி. அரசின் தாமதமாக அறிக்கை தாக்கல் : உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Lakimpur Farmers Massacre ,U. ,GP ,Govt ,Supreme Court ,Delhi ,Lakimpur, Uttar Pradesh ,Bajavinar ,Lakhimpur Farmers Massacre ,Dinakaran ,
× RELATED பாம்பு கடித்தவரை கங்கை நதியில் கட்டி...