×

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 24 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்று வருகின்றனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். தினேஷ் குண்டுராவ், எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன் உள்ளிட்ட 24 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டி.சுதாகர், நாகேந்திரா, சுரேஷா பி.எஸ்., உள்ளிட்டோருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. என்.எஸ். போஸ்ராஜூ, ரஹீம் கான், எச்.கே.படீல், கே.வெங்கடேஷ் உள்ளிட்டோரும் அமைச்சராக பதவியேற்று வருகின்றனர். 24 அமைச்சர்களில் லட்சுமி ஹெப்பால்கர் என்ற பெண் ஒருவரும் பதவியேற்கிறார்.

The post கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 24 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..!! appeared first on Dinakaran.

Tags : Congress party ,Karnataka ,Governor Thavarshand Kelat ,Bangalore ,Governor Thavarsant ,Governor ,Thavarshand Kelad ,Dinakaran ,
× RELATED உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி...