×

கிணற்றில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே பேயம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். விபத்தில் ஒரு கை இழந்த இவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். மனைவி மதனபிரியா. மகன் மோகுல் கிருஷ்ணன் (8), மகள் வர்ஷனா ஸ்ரீ (6). பள்ளியில் படித்து வந்தனர். சக்திவேல் நேற்று தனது இரண்டு குழந்தைகளையும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அருகே உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்றார். கிணற்றில் லாரி டியூப்பை பயன்படுத்தி குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்து கொண்டிருந்தார்.

அப்போது டியூப்பை தவறவிட்ட குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். ஒரு கை இழந்த சக்திவேலால் 2 குழந்தைகளையும் காப்பாற்ற இயலவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல் சத்தம் போட்டு அருகே உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார். ஆனால் அவர்கள் வருவதற்குள் 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். இதையடுத்து குழந்தைகளை மீட்ட பொதுமக்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கிணற்றில் மூழ்கி 2 குழந்தைகள் பலி appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Sakthivel ,Beyampatti ,Virudhunagar district ,
× RELATED சாலை நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்றக்கோரி வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு