×

ஆவி பிடித்த போது மூச்சுத்திணறி நர்சிங் மாணவி பலி

ஆறுமுகநேரி: தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள மேலசேர்ந்தபூமங்கலத்தைச் சேர்ந்த கோமதிநாயகத்தின் 2வது மகள் கௌசல்யா (19). இவர் நாசரேத் அருகேயுள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கௌசல்யாவுக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று காலை வீட்டில் வெந்நீர் வைத்து கௌசல்யா ஆவி பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி வெந்நீர் பாத்திரத்திற்குள் விழுந்துள்ளார். இதை பார்த்து அவரது தாய் அலறினார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கௌசல்யாவை மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர்.

The post ஆவி பிடித்த போது மூச்சுத்திணறி நர்சிங் மாணவி பலி appeared first on Dinakaran.

Tags : Arumukkiri ,Kausalya ,Gomadinayagam ,Maalenthapurumangalam ,Thoothukkudi ,Aathur ,Nazareth ,
× RELATED மீன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தேவை...