×

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த சொத்துக்களுக்கு உரிமை கோரி தீபா மனு

பெங்களூரு: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் வி.ஆர்.சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட இந்த சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று இவ்வழக்கு பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 34வது நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தரப்பில் வக்கீல் சத்யகுமார் ஆஜராகி ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடக்கூடாது அந்த சொத்துக்களுக்கு ஜெ.தீபா வாரிசு என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகையால் இந்த சொத்துக்களை அவருக்கு வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜராகி இருந்த துணை கண்காணிப்பாளர் புகழ்வேந்தன் எதிர்ப்பு தெரிவித்தார்.

The post சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த சொத்துக்களுக்கு உரிமை கோரி தீபா மனு appeared first on Dinakaran.

Tags : Deepa ,Bengaluru ,Late Tamil Nadu ,Tamil Nadu ,Jayalalithah ,Sasigala ,Princess ,V.P. ,R.R. Sutagaran ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...