×

ரூ17 மட்டுமே இருந்த நிலையில் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ100 கோடி டெபாசிட் செய்தது யார்?.. போலீஸ் விசாரணை

முர்ஷிதாபாத்: மேற்குவங்க தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ 17 மட்டுமே இருப்பு இருந்த நிலையில், அவரது கணக்கில் ரூ 100 கோடி டெபாசிட் ஆனது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பாசுதேப்பூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி முகமது நசிருல்லா மண்டல் என்பவரிடம், கொல்கத்தா சைபர் கிரைம் போலீசார், வழக்கு தொடர்பான நோட்டீஸ் கொடுத்தனர். அப்போது அவரிடம், ‘உங்கள் வங்கிக் கணக்கில் ரூ100 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் உங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது ’என்று கூறினர்.

போலீசாரின் பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்த முகமது நசிருல்லா மண்டல், என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தார். காரணம், அவரது வங்கிக் கணக்கில் 17 ரூபாய் மட்டுமே இருந்தது. அப்படி இருக்கையில் எவ்வாறு ரூ100 கோடி டெபாசிட் செய்யப்பட்டது என்பது குறித்து அவர் பெரும் குழப்பம் அடைந்தார். வங்கிக்கு சென்று கேட்டபோது, ரூ100 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது உறுதியானது. அவரது வங்கிக் கணக்கை வங்கி தற்காலிகமாக முடக்கியுள்ளது. ரூ100 கோடி டெபாசிட் செய்தது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரூ17 மட்டுமே இருந்த நிலையில் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ100 கோடி டெபாசிட் செய்தது யார்?.. போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Murshidabad ,West Bengal ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் பலவீனமான அரசை விரும்புகிறார் மம்தா: நட்டா குற்றச்சாட்டு