×

கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: சோனியா, ராகுலுடன் சித்தராமையா, டி.கே.சிவகுமார் தனித்தனியாக சந்திப்பு

பெங்களூரு: பெங்களூருவில் இருந்து புதன்கிழமை இரவு டெல்லி சென்ற முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து பேசியதுடன் அமைச்சரவையில் சேர்த்து கொள்ள தீர்மானித்துள்ளவர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை வழங்கினர். கர்நாடக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கடந்த 20ம் தேதி முதல்வராக சித்தராமையா, துணைமுதல்வராக டி.கே.சிவகுமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

அதை தொடர்ந்து, இரண்டாவது கட்ட அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக கட்சி மேலிட தலைவர்களிடம் ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் சித்தராமையா மற்றும் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் டெல்லி சென்றனர். கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சி தேசிய பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சி மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தினர். இதில் யார் யாரை அமைச்சரவையில் சேர்த்து கொள்வது என்ற பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.

அதை தொடர்ந்து நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சந்தித்து பேசினார். இதையடுத்து கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. 20 முதல் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது.

The post கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: சோனியா, ராகுலுடன் சித்தராமையா, டி.கே.சிவகுமார் தனித்தனியாக சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Sonia ,Rahul ,Siddaramaiah ,TK Sivakumar ,Bengaluru ,Chief Minister ,Deputy Chief Minister ,D.K.Sivakumar ,Delhi ,Congress ,
× RELATED சோனியா காந்தி நாடாளுமன்ற குழு தலைவர்...