×

பணியாளர் சிறப்பு ரயில்கள் பாதியாக ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் இடையே காலை 11.15, 1.20 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில் பாதியாக ரத்து செய்யப்பட்டு சூலூர்பேட்டை- கும்மிடிப்பூண்டி இடையே இன்று இயக்கப்படும். அதைப்போன்று மூர்மார்க்கெட்- சூலூர்பேட்டை இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில், சென்னை கடற்கரை- சூலூர்பேட்டை இடையே பிற்பகல் 12.40 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில் பாதியாக ரத்து செய்யப்பட்டு கும்மிடிப்பூண்டி- சூலூர்பேட்டை இடையே இன்று இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post பணியாளர் சிறப்பு ரயில்கள் பாதியாக ரத்து appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Southern Railway ,Sulurpet ,- Moormarket ,Dinakaran ,
× RELATED இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை –...