×

தண்டராம்பட்டு அருகே சாராயம் விற்ற பெண்கள் உட்பட 12 பேர் கைது

தண்டராம்பட்டு, மே 26: தண்டராம்பட்டு அடுத்த தச்சம்பட்டு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்ற பெண்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தண்டராம்பட்டு அடுத்த தச்சம்பட்டு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று எஸ்ஜ முபாரக், சதீஷ்குமார் தலைமையில் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தேவனூர் புதூர் கிராமத்தை சேர்ந்த ஜெயக்கொடி(46), மூஞ்சிராம்பட்டு சிவகாமி(70), பழையனூர் சாந்தி(35), பறையம்பட்டு ஆறுமுகம்(64), தச்சம்பட்டு ஏழுமலை(55), காட்டம்பூண்டி செல்வம்(37), நரியா பட்டு முரளிதரன்(28), வலசை சத்யராஜ்(30), வேலையாம்பாக்கம் முருகன்(37), கண்டியாங்குப்பம் அருணகிரி(56), வள்ளிமலை காந்தி(63), தச்சம்பட்டு முருகன்(48) ஆகிய 12 பேரை கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 600 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

The post தண்டராம்பட்டு அருகே சாராயம் விற்ற பெண்கள் உட்பட 12 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thandaramptu ,Dandarampattu ,Dachampattu ,Dinakaran ,
× RELATED கடந்த ஆண்டு ஒரு கிலோ ₹10 முதல் ₹13 வரை...