×

3 விதமான வந்தேபாரத் பிப்ரவரியில் அறிமுகம்

டேராடூன்: வரும் பிப்ரவரியில் 3 விதமான வந்தேபாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாடு முழுவதும் வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுபற்றி நேற்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,’ அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 160 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் தரத்திற்கு தண்டவாளம் மாற்றி அமைக்கப்படும். அதே போல் வந்தேபாரத் ரயில்கள் வந்தே சேர் கார், வந்தே மெட்ரோ, வந்தே ஸ்லீப்பர் என 3 வடியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும்.

வந்தே மெட்ரோ 100 கிமீக்குள்ளும், வந்தே சேர் கார் 100 முதல் 550 கிமீ தூரத்திற்குள்ளும், வந்தே ஸ்லீப்பர் 550 கிமீ தூரத்திற்கு மேல் உள்ள இடங்களுக்கும் இயக்கப்படும். வரும் ஜூன் மாதத்திற்குள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு வந்தேபாரத் ரயில் இயக்கப்படும். ஒவ்வொரு 8 மாதத்திற்கும் ஒரு முறை ஒரு ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதே போல் மேலும் 2 தொழிற்சாலைகள் தொடங்கப்படும். ரயில் பணிகளுக்கு 4ஜி அல்லது 5 ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post 3 விதமான வந்தேபாரத் பிப்ரவரியில் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Dehradun ,Union Railways ,Minister ,Aswini Vaishnav ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ