×

விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் தரையிறங்கிய மிக் 29 போர் விமானம்

புதுடெல்லி: ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் நேற்று முன்தினம் இரவு மிக் 29 போர்விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது கடற்படை வரலாற்றில் மைல்கல்லாகும்.
ஐஎன்எஸ் விக்ராந்த் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். ஐஎன்எஸ் விக்ராந்தில் பிப்ரவரியில் மிக் 29 போர் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனை பகல்நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இரவு நேரத்தில் ஐஎன்எஸ் விக்ராந்தில் மிக் 29 போர் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு அரபிக்கடலில் ஐஎன்எஸ் விக்ராந்த் சென்று கொண்டிருந்த போது முதல் முறையாக இந்த சோதனையை கடற்படையினர் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இது குறித்து கடற்படை அதிகாரிகள் , ‘‘வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாகும். சவாலான இரவாக இருந்தது. விமானந்தாங்கி கப்பலில் இரவு நேரத்தில் தரையிறங்கும் சோதனையானது விக்ராந்தின் பணியாளர்கள் மற்றும் கடற்படை விமானிகளின் மனஉறுதி, திறமை மற்றும் தொழில்முறையை நிரூபித்துள்ளது” என தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘ஐஎன்எஸ் விக்ராந்தில் மிக் 29 போர் விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்த இந்திய கடற்படையினருக்கு வாழ்த்துக்கள்” என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

The post விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் தரையிறங்கிய மிக் 29 போர் விமானம் appeared first on Dinakaran.

Tags : Vikrant ,New Delhi ,INS ,Navy ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...