புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை. பிரதமர் மோடியை வைத்து நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ளது. இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, விழாவில் பங்கேற்க போவதில்லை என்று புறக்கணித்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதியை கொண்டு திறக்கவும் இல்லை. விழாவுக்கு அவரை அழைக்கவும் இல்லை. இது நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு அவமதிப்பாகும். பாராளுமன்றம் அகந்தையால் (‘ஈகோ’) கட்டப்பட்டதல்ல. அது, அரசியல் சாசனத்தின் மதிப்பினால் கட்டப்பட்டதாகும்.
The post டெல்லி பாராளுமன்றம் அகந்தையால் கட்டப்பட்டதல்ல: ராகுல் காந்தி கருத்து appeared first on Dinakaran.
