×

நியூயார்க் துறைமுகத்தில் பிரமிப்பை ஏற்படுத்திய கப்பல்கள்; அமெரிக்க போர்க்கப்பல்களின் பேரணி விழா கோலாகலமாக தொடங்கியது..!!

வாஷிங்டன்: அமெரிக்க போர்க்கப்பல்களின் சேவையை போற்றும் ஃபிளீட் வீக் எனப்படும் வார விழா கொண்டாட்டம் நியூயார்க்கில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. நியூயார்க் துறைமுகத்தில் சுதந்திரமாதா சிலை அமைந்துள்ள பகுதியில் இருந்து அமெரிக்காவின் பிரம்மாண்டமான ஆயுதம் தாங்கிய போர் கப்பல்கள் இந்த அணிவகுப்பை தொடங்கியுள்ளன. 2500 மாலுமிகள் பங்குபெற்றுள்ள யூஎஸ்எஸ் வேஸ்ப் என்ற மிகப்பிரம்மாண்டமான போர் கப்பல் பேரணிக்கு தலைமை ஏற்றுச் செல்கிறது. இந்த போர்க்கப்பல் பேரணி வார விழா அமெரிக்காவின் கடற்படையினரின் சேவையை நினைவுகூரும் விழாவாகும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக போர்க்கப்பல் பேரணி விழா விமர்சியாக நடைபெறவில்லை. ஆனால் தற்போது கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்பதால் கப்பல் மாலுமிகள், கடற்படை வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 35வது ஆண்டு கப்பற்படை விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்த வண்ணம் உள்ளனர். இந்த பேரணி எதிர்வரும் 30ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. ஆயுதம் தாங்கிய இந்த போர் கப்பல்கள், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் செல்லவுள்ளன.

The post நியூயார்க் துறைமுகத்தில் பிரமிப்பை ஏற்படுத்திய கப்பல்கள்; அமெரிக்க போர்க்கப்பல்களின் பேரணி விழா கோலாகலமாக தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : New York harbour ,Washington ,Fleet Week ,New York ,New York Harbor ,Rally Festival of American Battleships ,
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...