×

சோலைமலை முருகன் கோயிலில் காமாட்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

 

அழகர்கோவில், மே 25: சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கியது. அப்போது நடந்த சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அழகர்கோவில் மலைமேல் அமைந்துள்ள முருகனின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழாவும் ஒன்றாகும்.

இந்த விழாவானது நேற்று நேற்று (மே 24) அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் தொடங்கியது.இதில் மூலவர் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவர் சுவாமிக்கும் காப்பு கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் சண்முகர் சுவாமிக்கும், வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனைகள் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவினை முன்னிட்டு தினமும் மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழா ஜூன் 2ம் தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து அன்றைய தினம் மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post சோலைமலை முருகன் கோயிலில் காமாட்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Kamatsiyamman ,Temple ,Maha Kumbabhishek ,Solaimalai Murugan Temple ,Alagharkoil ,Vaikasi Vasant Utsava ,
× RELATED தாசம்பாளையத்தில் நூற்றாண்டு பழமை...