×

லிப்ட் கேட்டுச் சென்றவரை மிதித்து கொன்ற வாலிபர்கள்; பணம் கேட்டு இல்லை என்றதால் பயங்கரம்

ஓட்டப்பிடாரம்: புதியம்புத்தூர் அருகே பைக்கில் லிப்ட் கேட்டு ஏறிச்சென்றவரிடம் பணம் கேட்டு இல்லை என்றதால் அவரை அடித்து, மிதித்துக் கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர், கழுகாசலபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). கூலித் தொழிலாளி. மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 18ம் தேதி இரவு புதியம்புத்தூர் – தட்டப்பாறை செல்லும் ரோட்டில் கற்கூரணி குளத்தில் இருந்து செல்லும் காற்றாடி மண் பாதையை அடுத்துள்ள காட்டுப் பகுதி சாலையில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

புதியம்புத்தூர் போலீசார், அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, மேல தட்டப்பாறையை சேர்ந்த ஹரிஹரன் (23), வெங்கடேஷ் (22) ஆகியோர் சேர்ந்து சதீஷ்குமாரை அடித்து, மிதித்துக் கொன்றது தெரிய வந்தது.

சம்பவத்தன்று பைக்கில் வந்த ஹரிஹரன், வெங்கடேசிடம் சதீஷ்குமார் லிப்ட் கேட்டு வந்துள்ளார். அவரை இறக்கி விடும்போது பணம் கேட்டுள்ளனர். அவர் இல்லை என்றதும் ஆத்திரமடைந்து கீழே தள்ளி அடித்து உதைத்து மிதித்துள்ளனர். இதில் அவர், அங்கேயே உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி ஹரிஹரன், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post லிப்ட் கேட்டுச் சென்றவரை மிதித்து கொன்ற வாலிபர்கள்; பணம் கேட்டு இல்லை என்றதால் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : New Ambathur ,
× RELATED போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது