×

கங்குலிக்கு மம்தா உரிய மரியாதை தரவில்லை: பாஜ குற்றச்சாட்டு

கொல்கத்தா: கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி திரிபுரா சுற்றுலா துறை தூதராக நியமிக்கப்பட்டது தொடர்பாக பாஜ, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.திரிபுரா மாநில சுற்றுலாத்துறையின் தூதராக(பிராண்ட் அம்பாசடர்) இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியமனம் தொடர்பாக பாஜ, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றசாட்டுகளை கூறியுள்ளன. இதுகுறித்து,கருத்து தெரிவித்த மேற்கு வங்க பாஜ தலைவர் சுகந்தா மஜூம்தார்,‘‘ மேற்கு வங்க மண்ணின் மைந்தர் கங்குலிக்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசு உரிய மரியாதை அளிக்கவில்லை.

ஆனால், சுற்றுலா துறை தூதராக நியமித்து கங்கலியை திரிபுரா பாஜ அரசு கவுரவப்படுத்தியுள்ளது. எனவே, கொல்கத்தா நகரின் ஷெரீப் ஆக கங்குலியை நியமிக்க வேண்டும்’’ என்றார். பாஜ எம்பி திலீப் கோஷ் கூறுகையில்,‘‘கங்குலி போன்ற புகழ்பெற்ற ஒருவர் இருக்கும்போது, பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மாநிலத்தின் தூதராக திரிணாமுல் அரசு நியமித்தது ஏன்’’ என்று கேள்வி கேட்டார். இந்த குற்றச்சாட்டு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகத்தா ராய் கூறும்போது,‘‘ இந்த விஷயத்தை வேண்டுமென்றே அரசியலாக்குவது தவறு’’ என்றார்.

The post கங்குலிக்கு மம்தா உரிய மரியாதை தரவில்லை: பாஜ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Mamata ,Ganguly ,BJP ,Kolkata ,Trinamool Congress ,Sourav Ganguly ,Tripura ,
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...