×

பாபா பைத்யநாத் கோயிலில் ஜனாதிபதி வழிபாடு

ராஞ்சி: ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஜார்கண்ட் புறப்பட்டு சென்றார். ராஞ்சியில் புதிய உயர்நீதிமன்ற கட்டிட திறப்பு விழா, பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். இந்நிலையில் தியோகர் மாவட்டத்தில் உள்ள 12 ஜோதிலிங்கங்களில் ஒன்றான பாபா பைத்யநாத் கோயிலுக்கு சென்ற ஜனாதிபதி முர்மு அங்கு சிறப்பு வழிபாடு நடத்தி சுவாமி தரிசனம் செய்தார்.

கோமா நிலையில் மனோகர் ஜோஷி
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி(85) கடந்த திங்களன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மூளையில் ரத்த கசிவு காரணமாக அவர் கோமா நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

வெறுப்பு பேச்சு வழக்கில் அசம் கான் விடுவிப்பு
ராம்பூர்: சமாஜ்வாதி கட்சியின் ராம்பூர் சதார் தொகுதி எம்எல்ஏ அசம் கான், கடந்த 2019ம் ஆண்டு வெறுப்பூட்டும் பேச்சுகளை பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி மூன்று ஆண்டுகள் தண்டனை விதித்து எம்பி-எம்எல்ஏ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனை தொடர்ந்து அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் கீழ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

The post பாபா பைத்யநாத் கோயிலில் ஜனாதிபதி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Baba Baithyanath Temple ,Ranchi ,President ,Draupadi Murmu ,Jharkhand ,New High Court ,Worship ,Dinakaran ,
× RELATED பெற்றோரை கவனிக்காதவர்களுக்கு 15%...