×

கோடை விடுமுறையில் தேக்கடியில் படகு சவாரிக்கு குவியும் சுற்றுலாப் பயணிகள்

கூடலூர்: கோடை விடுமுறையையொட்டி, சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். தற்போது, பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் அதிகளவில் தேக்கடிக்கு வருகின்றனர். இங்கு யானை சவாரி, நேச்சர் வாக், மூங்கில் படகு சவாரி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

இருப்பினும் படகுச்சவாரியின்போது நீர்நிலைகளுக்கு வரும் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் பல்வேறு வகையான பறவையினங்களையும் காணலாம் என்பதால், சுற்றுலாப்பயணிகளின் விருப்பத்தில் படகு சவாரி முதலிடம் வகிக்கிறது. தேக்கடி ஏரியில் தற்போது கேரள சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் கேரள வனத்துறையினரின் 6 படகுகள் சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய இயக்கப்படுகின்றன.

படகு சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385 ஆகவும், நுழைவுக் கட்டணம் ரூ.70 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு, சில தினங்களாக இங்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர். பெரும்பாலானோர் படகு சவாரி செல்ல ஆர்வம் காட்டுவதால், படகுத்துறையில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் குறிப்பிட்ட அளவு பயணிகளுக்கே படகு சவாரிக்கு டிக்கெட் கிடைப்பதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

The post கோடை விடுமுறையில் தேக்கடியில் படகு சவாரிக்கு குவியும் சுற்றுலாப் பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Dakkadi ,Cuddalore ,Dinakaran ,
× RELATED எலி பேஸ்ட் சாப்பிட்ட 4 குழந்தைகள் அட்மிட்