×

எலிமினேட்டர் போட்டியில் மும்பை-லக்னோ இன்று மோதல்

சென்னை: ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன. குருணல் பாண்டியா தலைமையிலான லக்னோ அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ், பூரன் , டிகாக் என அதிரடி வீரர்கள் உள்ளனர். பவுலிங்கில் யாஷ் தாக்குர்,, அவேஷ் கான், நவீன் உல்ஹக், அமித் மிஸ்ரா வலு சேர்க்கின்றனர். மறுபுறம் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை,பேட்டிங்கில் அசுர பலத்துடன் உள்ளது.

இந்த சீசனில் 4முறை 200 பிளஸ் ரன்னை சேசிங் செய்துள்ளது. பல்வேறு சாதனைகளை மும்பை நிகழ்த்தி இருந்தாலும் லக்னோவை இதுவரை வென்றது கிடையாது. கடந்த சீசனில் 2 இந்த சீசனில் 1 என 3 போட்டிகளிலும் லக்னோவே வென்றுள்ளது. இன்று அதற்கு பதிலடிகொடுக்க மும்பை போராடும்.

The post எலிமினேட்டர் போட்டியில் மும்பை-லக்னோ இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Lucknow ,Eliminator ,Chennai ,Lucknow Super Giants ,Chepakkam ,IPL ,Dinakaran ,
× RELATED உலக கோப்பையில் ரோகித், கோஹ்லி ஆடுவது...