×

2 கால்கள், ஒரு கையை இழந்த நிலையில் தையல் தொழிலாளியின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் அபாரம்: பெற்றோர், கிராமத்தினர் மகிழ்ச்சி

மெயின்புரி: இரண்டு கால்கள், ஒரு கையை இழந்த தையல் தொழிலாளியின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றதால், அவரது பெற்றோர், கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டம் கர்னாஜ்பூரில் வசிக்கும் ராஜேஷ் திவாரியின் மகன் சூரஜ் திவாரி, நேற்று வெளியான சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 971வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு இரண்டு கால்களும் இல்லை, ஒரு கையும் இல்லை, ஒரு கையில் மூன்று விரல்கள் மட்டுமே உள்ளன.

சூரஜின் தந்தையான ராஜேஸ் திவாரி, தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். குடும்பத்தில் வறுமை இருந்தும், தனது விடா முயற்சியால் சூரஜ் திவாரி, சிவில் சர்வீஸ் தேர்தலில் வெற்றி பெற்றதால் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவரது தந்தை ராஜேஷ் திவாரி கூறுகையில், ‘எனது மகன் சூரஜ் திவாரி, பிஎஸ்சி படித்துக் கொண்டிருந்தபோது, கடந்த 2017ம் ஆண்டு ​​ஜனவரி 24ம் தேதி காஜியாபாத்தில் நடந்த ரயில் விபத்தில் சிக்கினார்.

அப்போது அவரது இரண்டு கால்கள், வலது கை முழங்கை மற்றும் இடது கையின் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டன. ஆனாலும் தனது விடா முயற்சியால் கடந்த 2021ம் ஆண்டு டெல்லி ஜேஎன்யூவில் சேர்ந்து எம்ஏ படித்தார். அப்போது, தன்னை ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டார். அவரது தொடர் முயற்சியால் வெற்றி பெற்றார்’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

The post 2 கால்கள், ஒரு கையை இழந்த நிலையில் தையல் தொழிலாளியின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் அபாரம்: பெற்றோர், கிராமத்தினர் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Mainpuri ,
× RELATED அகிலேஷ் மனைவிக்கு ரூ.15 கோடி சொத்து