×

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்க மாற்றுத் திறனாளிகள் மனு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடைகளை ஒதுக்க வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் மனு வழங்கினர். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட எஸ்பி சாய்பிரணீத் உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், கட்சி பிரதிநிதிகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மான்குமார் உள்ளிட்ட ஒருசில மாற்றுத் திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் ஒன்றுசேர்ந்து, அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் ஒரு மனு அளித்தனர். அம்மனுவில், கிளாம்பாக்கத்தில் புதிதாக நவீன புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு பயணிகளின் வசதிக்காக, சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு உள்ளன. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஒருசில கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தியிருந்தனர். இம்மனுவை பெற்று கொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

The post கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்க மாற்றுத் திறனாளிகள் மனு appeared first on Dinakaran.

Tags : PWD ,Clambakem ,Chengalpattu ,People's Grievance Meeting ,Chengalpattu District Collector ,
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிக்கு...