×

சித்தூர் அருகே மின்சாரம் தாக்கி மகன் படுகாயமடைந்ததை அறிந்த தாய் அதிர்ச்சியில் சாவு

*சிகிச்சை பலனின்றி லைன் மேனும் பலி

சித்தூர் : சித்தூர் அருகே மின்சாரம் தாக்கி மகன் படுகாயம் அடைந்ததை அறிந்த தாய் அதிர்ச்சியில் இறந்தார். மேலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் லைன்மேன் உயிரிழந்ததாக உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்சித்தூர் மாவட்டம் யாதமரி மண்டலத்தில் மின்சாரத்துறை அலுவலகத்தில் லைன் மேனாக பவன்(46) என்பவர் பணிபுரிந்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு மின்சார துறை அதிகாரிகள் மின்சார வயர்களை சரி பார்க்க வேண்டும் என லைன் மேன் பவனிடம் தெரிவித்துள்ளார். இதனால் சப் ஸ்டேஷன் சென்று மின்சாரத்தை துண்டித்து விட்டு மின்சார ஒயர் லைன்களை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்னர் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் செடி, கொடிகள் சூழ்ந்திருந்ததால் அதை அகற்றும் பணியில் பவன் ஈடுபட்டிருந்தார். அப்போது, இதையறியாமல் சப் ஸ்டேஷனில் இருந்து மின்சாரத்தை அதிகாரிகள் யாரோ ஆன் செய்துள்ளார்கள் இதனால் மின்சாரம் தாக்கி பவன் தூக்கி எறியப்பட்டார். இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அவரை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். அப்போது, மருத்துவர்கள் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது மின்சாரத் துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து பவன் சிகிச்சைக்காக அனைத்து செலவுகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.

ஆனால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பவனுக்கு மருத்துவ கட்டணம் செலுத்தாததால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவனை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்து டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பவனின் தாய் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பவன் உறவினர்கள் அவரை மீட்டு திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பவன் உறவினர்கள் சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் சித்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து அதிகாரிகளின் அலட்சியத்தால் பவன் உயிரிழந்து விட்டார். பவனுக்கு மின்சார துறை அதிகாரிகள் மருத்துவ செலவு ஏற்று கொண்டிருந்தால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை அவரை டிஸ்சார்ஜ் செய்து இருக்காது. அவர்கள் மருத்துவ செலவு ஏற்றுக்கொள்ளாததால் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம்.

அங்கு சிகிச்சை பலனின்றி பவன் உயிரிழந்தார். இதற்கு முக்கிய காரணம் மின்சார துறை அதிகாரிகள் தான். ஆகவே மருத்துவத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இரண்டாவது காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மகன் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்ததை அறிந்த தாய் உயிரிழந்தது தாயை அடுத்து மகன் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

The post சித்தூர் அருகே மின்சாரம் தாக்கி மகன் படுகாயமடைந்ததை அறிந்த தாய் அதிர்ச்சியில் சாவு appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Chau ,
× RELATED நடைபெற உள்ள பொதுத்தேர்தலில்...