×

பருவம் தவறி பெய்த கனமழையால் பருத்தி செடிகளை தாண்டி வளர்ந்த களைகள்-செம்மங்குடி பகுதி விவசாயிகள் கவலை

வலங்கைமான் : வலங்கைமான் தாலுகாவில் சுமார் 8 ஆயிரத்து 250 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது மற்றும் ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரத்தின் உதவியுடன் மண் அணைத்தல், மண் கிளறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதால் பருத்தி சாகுபடி இந்தாண்டும் கூடுதலாக நடைபெற்றது.

கடந்த ஆண்டு வரை பருத்தி சாகுபடி செய்வதற்காக விதைக்கும் பணி மேற்கொள்ளும் வகையில் போதிய இடைவெளியில் சிறிய அளவிலான பத்திகள் அமைத்து பருத்தி விதையை விதைத்து வந்தனர்.இந்நிலையில் நடப்பு பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் வயலில் புழுதி உழவு செய்தும், சில இடங்களில் சேற்று உழவு செய்தும் பின்னர் பருத்தி விதையை விதைத்தனர் .புழுதி மற்றும் சேற்று உழவு செய்து பருத்தி விதைப்பதன் மூலம் செடிகளின் வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கும்.

மேலும் பருத்தியின் முளைப்புத்திறன் கூடுதலாக உள்ளதாகவும், களை நிர்வாகம் போன்றவற்றிற்கு ஆகும் செலவு குறைவாக இருப்பதாகவும் உழவு செய்து பருத்தி விதைகளை விதைக்கும் நடைமுறையை மேற்கொண்டனர்.இந்நிலையில் வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோடை மழை பருவமழையை போலவே பெய்தது. இதன் காரணமாக, பருத்தி செடிகளை சுற்றி தண்ணீர் தேங்கியது. மழைக்கு முன்னதாக மண் கிளறும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், மழைக்குப் பிறகு மண் அணைக்கும் பணி மேற்கொள்ள இயலாமல் போனது.

இதன் காரணமாக பருத்தி செடிகளை தாண்டி களைகள் வளர்ந்து பருத்தி செடிகள் வளர்ச்சி வேகத்தை குறைத்தது .இந்நிலையில் வலங்கைமான் அடுத்த செம்மங்குடி பகுதியில் பருத்தி செடிகளை சுற்றி உள்ள களைகளை பெண் பணியாளர்களைக் கொண்டு நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி செலவு அதிகமாகிறது என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post பருவம் தவறி பெய்த கனமழையால் பருத்தி செடிகளை தாண்டி வளர்ந்த களைகள்-செம்மங்குடி பகுதி விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Semmangudi ,Valangaiman ,Valangaiman taluka ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம...