×

தருமபுரி மாவட்டத்தில் கோயில் திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்ட பட்டாசுகள் வெடித்து சிறுவன் உட்பட 2 பேர் பலி..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கோயில் திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்ட பட்டாசுகள் வெடித்து சிறுவன் உட்பட 2 பேர் பலியாகினர். தருமபுரி மாவட்டம் சிந்தில்பாடி அருகே சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் நேற்று இரவு மினி லாரியில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது வனவேடிக்கையின் போது பட்டாசு நெருப்பு மினி லாரிக்குள் விழுந்தது. இதையடுத்து மினி லாரியில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின. இதில் லாரிக்கு அருகில் இருந்த 7 வயது சிறுவன் ஆகாஷ் உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த ஓட்டுநர் ராகவேந்திரனும் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post தருமபுரி மாவட்டத்தில் கோயில் திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்ட பட்டாசுகள் வெடித்து சிறுவன் உட்பட 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : festival ,Dharmapuri district ,Dharmapuri ,Dharampuri district ,Dharumapuri district ,
× RELATED அரூர் அருகே மாட்டிறைச்சி...