×

விஏஓ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சார் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

வேப்பூர், மே 24: விருத்தாசலம் அடுத்த டிவி புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் விருத்தாசலம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தார். அப்போது விருத்தாசலத்தை சேர்ந்த ஜெயந்தி, கொளஞ்சியம்மாள், கருப்புசாமி, லட்சுமி தேவி, மஞ்சு, செல்வி, வசந்தா, பரமசிவன் உள்ளிட்டோர் இலவச மனை பட்டா கேட்டு கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுநீதி முகாமில் கொடுத்திருந்தனர். இதை தெரிந்துகொண்ட அப்போதைய விருத்தாசலம் கிராம நிர்வாக அலுவலர் இலவச மனை பட்டா வழங்க ஒவ்வொருவரிடமும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதுநாள் வரை இலவச மனை பட்டா வழங்கப்படவில்லை. மேலும் கிராம நிர்வாக அலுவலர் பணத்தை தர மறுத்து மிரட்டி வருகிறார். இதனை கண்டித்து பாதிக்கப்பட்டோர் கடந்த 14 ஆம் தேதி விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சார் ஆட்சியர் லூர்துசாமி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த நிலையில் வருகின்ற 31ம் தேதி கிராம நிர்வாக அலுவலர் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகவும், அதற்குள் விசாரணை முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கக்கோரி சார் ஆட்சியர் அலுவலகம் முன் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதனை பெற்றுக்கொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post விஏஓ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சார் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : VAO ,Tsar Ruler's Office ,Vepur ,Vruddasalam ,Next TV ,Puttur ,Village Administrative Officer ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!