×

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நடுத்தர மக்கள் சாலையில் பயணிப்பதே கடினமாகிவிட்டது: காங். பொது செயலாளர் பிரியங்கா காந்தி தாக்கு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் நடுத்தர மக்கள் சாலைகளில் பயணிப்பதே கடினமாகிவிட்டது என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று முன்தினம் லிட்டருக்கு 35காசுகள் உயர்ந்தது. இந்த விலை உயர்வை அடுத்து டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 104.84 மற்றும் மும்பையில் 111.77 காசாக விற்பனை ஆனது. இதேபோல் டீசல் விலையும் முறையே லிட்டர் 94.57 மற்றும் 102.52க்கு விற்பனை செய்யப்பட்டது. இது விமான நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் ஏடிஎப் எரிபொருளை காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு விலை அதிகமாக இருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘‘இது மிகவும் தீவிரமான பிரச்னையாகும். தேர்தல், வாக்குகள், அரசியலுக்கு முன் இன்று மக்களின் சிறு தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை. மோடியின் நண்பர்கள் பயன்பெறுவதற்காக ஏமாற்றப்பட்ட மக்களுடன் எப்போதும் உடன் இருப்பேன். அவர்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன்” என டிவிட்டரில்  பதிவிட்டுள்ளார்.   இது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், பாஜ மிகவும் விலை உயர்ந்த நாட்களை கொண்டு வந்துள்ளது என்ற தலைப்பில், ‘‘பாஜ அரசானது ஹவாய் செருப்பு அணிந்தவர்கள் விமானத்தில் பயணம் செய்யலாம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் விலையை மிகவும் அதிக அளவு உயர்த்தியுள்ளது. இதனால் ஹவாய் செருப்பு அணிந்தவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் சாலையில் பயணம் செய்வதே கடினமாகி விட்டது” என பதிவிட்டுள்ளார்….

The post பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நடுத்தர மக்கள் சாலையில் பயணிப்பதே கடினமாகிவிட்டது: காங். பொது செயலாளர் பிரியங்கா காந்தி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Kong ,General Secretary ,Priyanka Gandhi Vadra ,New Delhi ,Congress ,Priyanka ,Priyanka Gandhi Thakku ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...