×

சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் கால்வாய் பணியை முடிக்க வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் ஆயில்மில்லில் இருந்து கலெக்டர் அலுவலகம் டோல்கேட் வரை சாலையின் இரண்டுபுறத்திலும் மழைநீர் செல்ல கால்வாய் அமைக்கும் பணி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. தற்போது 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கோயில் மற்றும்டிரான்ஸ்பார்மர் கடைகள், வீடுகள் இருப்பதால் அந்த இடங்களில் வசிக்கின்றவர்களின் எதிர்ப்பு காரணமாக கால்வாய் அமைக்கும் பணிகள் பாதியில் நிற்கிறது.

இதன்காரணமாக மீதம் உள்ள பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சென்னை, திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மீதம் உள்ள இடங்களில் பிரச்னையை தீர்த்து முழுமையாக கால்வாய் பணிகளை முடிக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் கால்வாய் பணியை முடிக்க வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Chennai-Tirupati Highway ,Thiruvallur ,Chennai-Tirupati National Highway ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்