×

ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்பட வில்லன் நடிகர் ஸ்டீவ்சன் உயிரிழப்பு

 

அயர்லாந்த்: ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்று சாதனை படைத்தது. இதனிடையே, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் வில்லனாக ராய் ஸ்டீவ்சன் (வயது 58) நடித்திருந்தார். அயர்லாந்து நாட்டின் லிஸ்பர்ன் நகரில் 1964 ஆம் ஆண்டு பிறந்த ராய் ஸ்டீவ்சன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் மிகவும் கொடூரமான பிரிட்டிஷ் கவர்னர் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இவர் பிரபல ஆங்கில படமான ‘தோர்’ படத்திலும், பிரபல வெப் தொடரான ‘ரோம்’ ஆகியவற்றிலும் நடித்து பிரபலமடைந்தார். இந்நிலையில், நடிகர் ராய் ஸ்டீவ்சன் (வயது 58) நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) திடீரென உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. ஆர்ஆர்ஆர் திரைப்பட வில்லன் நடிகர் ஸ்டீவ்சன் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது திடீர் மரணத்திற்கு பிரபலங்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

The post ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்பட வில்லன் நடிகர் ஸ்டீவ்சன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Stevenson ,Rajamouli ,Ireland ,Ram Saran, Jr. N. TD ,
× RELATED 80 ஆயிரம் கிமீ நடந்து இந்திய வம்சாவளி முதியவர் சாதனை