×

ஆசிட் ஊற்றுவதாக மாணவியை மிரட்டிய வாலிபரிடம் விசாரணை குடியாத்தத்தில் பரபரப்பு செல்போன் பரிசளித்து காதல் டார்ச்சர்

குடியாத்தம், மே 23: குடியாத்தத்தில் செல்போன் பரிசளித்து பிளஸ் 1 மாணவிக்கு காதல் டார்ச்சர் கொடுத்து, ஆசிட் ஊற்றுவதாக மிரட்டி வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த 16 வயது மைனர் பெண் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் குடியாத்தம் கஸ்பா பகுதியை சேர்ந்த வாலிபர் பிரவீன் என்பவர் தனியார் பைக் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவர் மாணவியை ஒருதலையாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் மாணவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், மாணவி நேற்று அவரது தோழி வீட்டிற்கு சென்று மீண்டும் வீடு திரும்பி உள்ளார். இதனை அறிந்த பிரவீன் காதல் பரிசாக ஆப்பிள் செல்போன் கொடுத்து இதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கையில் எடுத்து வந்த ஆசிட்டை முகத்தில் ஊற்றி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதில் பீதியடைந்த மாணவி செல்போனை பெற்றுக் கொண்டு அவரது வீட்டிற்குச் சென்று நடந்ததை அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் பிரவீனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post ஆசிட் ஊற்றுவதாக மாணவியை மிரட்டிய வாலிபரிடம் விசாரணை குடியாத்தத்தில் பரபரப்பு செல்போன் பரிசளித்து காதல் டார்ச்சர் appeared first on Dinakaran.

Tags : Gudiyattam ,
× RELATED தூங்கிய மூதாட்டியை கொன்ற மனநலம்...