×

அரசு திட்டங்களை மக்களிடம் ெகாண்டு சேர்ப்பதே முதல் கடமை: புதிய கலெக்டர் பேட்டி

 

ராமநாதபுரம், மே 23: ராமநாதபுரம் கலெக்டராக இருந்த ஜானி டாம் வர்கீஸ் நாகைக்கும், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக பணியாற்றி வந்த விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் கலெக்டராகவும் நியமிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பொறுப்புகளை புதிய கலெக்டரான விஷ்ணுசந்திரனிடம் வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டத்தின் 27வது கலெக்டராக விஷ்ணு சந்திரன் பதவி யேற்றுக்கொண்டார். அவர் கூறும்போது, ‘‘மாவட்டத்தின் எந்த பகுதியை சேர்ந்தவராக இருந்தாலும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து என்னை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனு அளிக்கலாம், அவசர உதவிகளுக்கு போனில் பேசலாம்.

அனைத்து மக்களுக்கும் அரசு திட்டங்களை உடனுக்குடன் கொண்டு போய் சேர்ப்பதே முதல் கடமையாகும். கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து 10ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் முதன்மையான மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பதவியேற்பு நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ கோவிந்தராஜலு, கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், பரமக்குடி சப்.கலெக்டர் அப்தாப்ரசூல், பயிற்சி கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அரசு திட்டங்களை மக்களிடம் ெகாண்டு சேர்ப்பதே முதல் கடமை: புதிய கலெக்டர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Johnny Tom Varghese Naka ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...