×

வியாசர்பாடி கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் பயங்கர மோதல்: 7 வாலிபர்கள் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி காந்திநகர் 2வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் டில்லிராஜ் (19). இவரும், இவரது நண்பர்களும் நேற்று வியாசர்பாடி காந்திநகர் பகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொண்டனர். அப்போது எம்கேபி நகர் எஸ்ஏ காலனி 7வது தெருவைச் சேர்ந்த பிரசாத் (22) என்ற நபரை டில்லிராஜ் தரப்பினர் அடித்துள்ளனர். இதனையடுத்து பிரசாத் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு டில்லிராஜ் வீட்டின் அருகே சென்று பிரச்னை செய்துள்ளார். அப்போது இரு தரப்பினரும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். இதில் டில்லிராஜூக்கு தலையில் காயம் ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

மேலும் சண்டையில் ஈடுபட்ட அனைவருக்கும் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாசர்பாடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த டில்லிராஜ் (19), வினிஷ் (21), ஹரிஷ் (20), சஞ்சய் (19) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இதேபோல் எதிர் அணியில் வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்த ரோகித் (19), சுதர்சன் (20), உதயகுமார் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வியாசர்பாடி கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் பயங்கர மோதல்: 7 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Vyasarpadi temple festival ,Perambur ,Tilliraj ,Vyasarpadi Gandhinagar 2nd Street ,Vyasarbadi Gandhinagar ,Vyasarbadi temple festival ,Dinakaran ,
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...