கொழும்பு: எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க சீன அரசின் சினோபெக் நிறுவனத்துடன் இலங்கை அரசு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்தாண்டு வரலாறு காணாத நிதி, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கு மின்சாரத் துறை அமைச்சகம் த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இலங்கை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப சினோபெக் ப்யூயல் ஆயில் லங்கா பிரைவேட் லிமிடெட் மற்றும் சீனா, சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட்டது. நீண்ட கால ஒப்பந்தம் அதிபர் அலுவலகத்தில் வைத்து நேற்று கையெழுத்தானது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
The post எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க சீன நிறுவனத்துடன் இலங்கை புதிய ஒப்பந்தம்: அதிபர் அலுவலகம் தகவல் appeared first on Dinakaran.