×

2019 மக்களவை தேர்தல் வீரர்களின் சடலங்கள் மீது நடந்தது: சத்யபால் மாலிக் அடுத்த அதிரடி

ஜெய்ப்பூர்: கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் வீரர்களின் சடலங்கள் மீது நடத்தப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பு அங்கு ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் சமீபத்தில் புல்வாமா தாக்குதலில் வீரர்கள் அரசின் கவனக்குறைவினால் உயிரிழந்தனர். இது பற்றி பிரதமர் மோடிக்கு தெரிவித்த போது அவர் அமைதியாக இருக்கும்படி சொன்னதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காஷ்மீரின் இன்சூரன்ஸ் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க ரூ.300 கோடி லஞ்சம் தருவதாக தன்னிடம் பேரம் பேசப்பட்டதாகவும சத்யபால் மாலிக் கூறியிருந்தார். இது தொடர்பாக அவரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தியது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பன்சூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சத்யபால் மாலிக், “கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் நமது ராணுவ வீரர்களின் சடலங்கள் மீது நடத்தப்பட்டது. இது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது அப்போதைய உள்துறை அமைச்சர் பதவி விலகி இருந்திருக்க வேண்டும். ஏராளமான அதிகாரிகள் சிறை சென்றிருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

The post 2019 மக்களவை தேர்தல் வீரர்களின் சடலங்கள் மீது நடந்தது: சத்யபால் மாலிக் அடுத்த அதிரடி appeared first on Dinakaran.

Tags : Satyabal Malik ,Jaipur ,Former ,Governor ,Jammu ,Kashmir ,Satyabal ,
× RELATED பாஜவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்: சச்சின் பைலட் கருத்து