×

பாஜ ஆட்சியில் பெயரளவுக்கே ஜனாதிபதி பதவி: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி : ‘‘பாஜ ஆட்சியில் ஜனாதிபதி பதவி பெயரளவுக்கு மட்டுமே இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28ம் தேதி திறந்து வைக்க இருக்கிறார் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைக்கப்படவில்லை.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டர் பதிவில், “தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களில் இருந்து ஜனாதிபதிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்பதை மோடி தலைமையிலான அரசு உறுதி செய்வது போல் தெரிகிறது.

நாடாளுமன்றம் இந்திய குடியரசின் உச்சபட்ச சட்ட அமைப்பாகும். ஜனாதிபதி, அதன் உயர்வான அரசியலமைப்பு அதிகாரம் கொண்டவர். அவர் மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் ஒவ்வொரு குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரே இந்தியாவின் முதல்குடிமகள். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அவர் திறந்து வைப்பது என்பது ஜனநாயக மதிப்புகள், அரசியலமைப்பு உரிமைகள் ஆகியவற்றைக் காப்பதற்கான அரசின் அடையாளமாகும்,” என்று கூறியுள்ளார்.

The post பாஜ ஆட்சியில் பெயரளவுக்கே ஜனாதிபதி பதவி: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : President ,Carke ,New Delhi ,Congress ,Malligarjuna Karke ,Karke ,Dinakaran ,
× RELATED நாட்டின் அரசியல் சட்டத்தை அனைவரும்...