×

பெரியபாளையம், வடமதுரை ஊராட்சியில் ரூ.15.40 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாரும் பணி

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சியில் ரூ.15.40 லட்சம் செலவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு குளம் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி எர்ணாங்குப்பம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊரின் மையப்பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட சின்னரெட்டி குளம் ஒன்று உள்ளது. இதை அப்பகுதி மக்கள், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். மேலும், ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் மேய்ச்சல் முடிந்தவுடன் இந்த குளத்தில் தண்ணீர் குடிக்கும். ஆனால், இந்தக்குளம் தற்போது புதர்கள் மண்டி, செடி, கொடிகள் படர்ந்து தூர்ந்து காணப்படுகிறது.

இதை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், சுமார் 35 வருடங்களுக்கு பிறகு தற்போது அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ..15.40 லட்சம் ஒதுக்கப்பட்டு, குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: எர்ணாங்குப்பம் கிராமத்தில் உள்ள குளம் கடந்த 35 வருடங்களாக தூர்வாராமல் கிடந்தது. குளத்தை தூர்வார வேண்டும் என நாங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தோம். அதன்பேரில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட வடமதுரை ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி எனக்கூறினர்.

The post பெரியபாளையம், வடமதுரை ஊராட்சியில் ரூ.15.40 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Tags : Periyapalaiam, Vadamadurai ,Vadamadurai ,Periyapalayam ,Periyapalayam, Vadamadurai Uradi ,Dinakaran ,
× RELATED திமுக ஆலோசனைக் கூட்டம்