×

கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளால் பரபரப்பு..!!

ஈரோடு: கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. பவானி சாகர் அணையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் நீளத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலின் இரு கரைகளும் மண்ணால் அமைக்கப்பட்டவை. இந்த கரைகளால் நீர்க்கசிவு ஏற்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து வாய்க்காலின் இரு கரைகளிலும் கான்கிரீட் தளம் அமைக்க 710 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த திட்டத்திற்கான பணிகளை விரைந்து தொடங்கிடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் கால்வாயில் கான்கிரீட் அமைத்தால் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும் என்றும் மண் கால்வாயாகவே பராமரிக்க வேண்டும் என்று கோரி ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர்கள், அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி முழக்கங்கள் எழுப்பியதுடன் ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவிடம் தனித்தனியாக மனு அளித்துள்ளனர்.

கீழ்பவானி கால்வாயில் உள்ள 44 பாசன சபைகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்துவது என்றும் அதன் பிறகே சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். முன்னதாக விவசாயிகளின் அழைப்பை ஏற்று இன்று தலமலை, அரச்சலூர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் சுமார் 200 கடைகளை வியாபாரிகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...