×

சென்னையில் பார்வையாளர்களை கவரும் அருங்காட்சியகம்: இந்திய ரயில்வேயின் நீராவி எஞ்சின், மலை ரயில் உள்ளிட்ட சிறப்பம்சங்களை விளக்கும் காட்சி

சென்னை: சென்னையில் உள்ள அருங்காட்சியகம் இந்திய ரயில்வேயில் சிறப்பம்சங்களை விளக்கும் வகையில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. வில்லிவாக்கத்தில் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 6.15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட நீராவி எஞ்சின், பழைய உதகை மலை ரயில் ஆகியவை காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. பொம்மை சவாரி வசதியுடன் புதுப்பிக்கப்பட்ட உட்புற கலைக்கூடம் பொதுமக்களை கவர்ந்திழுக்கிறது.

உலகெங்கிலும் உள்ள அதிவேக ரயில்களின் படங்கள், இந்திய ரயில்வேயின் வரலாற்றை கூறும் ஆவணங்கள், இலங்கை, பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகளுக்கான தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளும் இங்கு இடம் பெற்றுள்ளன. மேலும், மும்பை புறநகரில் வலை பின்னல் வழித்தடங்கள், இந்தியாவின் பழைய ரயில்களின் ஓவியங்கள், நூற்றாண்டு பழமையான கடிகாரங்கள் உள்ளிட்ட ஏராளமானவை இங்கு வருவோரை வியந்து ரசிக்க வைக்கின்றன. மூன்றடுக்கு ரயில், ஐ.சி.எஃப்-ன் ஐம்பது ஆண்டு கால நிறைவு புகைப்படங்களும் வரலாறு பேசுகின்றன.

நீலகிரி மலையில் முந்தைய காலத்தில் இயங்கிய பழங்கால நீராவி இயந்திரம் அருங்காட்சியகத்தில் நுழைவாயிலில் வரவேற்க அதனை சுற்றி பசுமையான தாவரங்களும், மூலிகைகளும் அலங்கரிக்கின்றன. சர்வதேச அருங்காட்சியகம் தினத்தையொட்டி இன்று நான்கு நாட்கள் நடந்த கண்காட்சியில் பாரம்பரிய ரயில்களின் மினியேச்சர்கள் இடம்பெற்று இருந்தன. உள் அரங்கத்தில் அமைக்கப்பட்ட இந்திய ரயில்வே துறையின் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை வெளிக்கொணரும் சிறப்பு காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

The post சென்னையில் பார்வையாளர்களை கவரும் அருங்காட்சியகம்: இந்திய ரயில்வேயின் நீராவி எஞ்சின், மலை ரயில் உள்ளிட்ட சிறப்பம்சங்களை விளக்கும் காட்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Indian Railway ,Train ,Indian Railways ,Villivakam ,
× RELATED சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மென்ட் புறநகர் ரயில் தி.மலை வரை நீட்டிப்பு..!!